இலங்கைக்கு எதிரான பயிற்சி ஆட்டம்: 338 ரன்கள் குவித்த தென்ஆப்பிரிக்கா

வெள்ளிக்கிழமை, 24 மே 2019      விளையாட்டு
SAfrica won 2019 05 24

Source: provided

லண்டன் : உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக தென்ஆப்பிரிக்கா 7 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் குவித்துள்ளது.

பந்துவீச்சு தேர்வு...

உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென்ஆப்பிரிக்கா அணியின் ஹசிம் அம்லா, மார்கிராம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

338 ரன்கள்...

மார்கிராம் 21 ரன்கள் அடித்த நிலையில் வெளியேறினார். அதன்பின் 2-வது விக்கெட்டுக்கு ஹசிம் அம்லா உடன் கேப்டன் டு பிளிசிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அம்லா 61 பந்தில் 65 ரன்களும், டு பிளிசிஸ் 69 பந்தில் 88 ரன்களும் சேர்த்தனர். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 138 ரன்கள் குவித்தது. வான் டெர் டஸ்சன் 40 ரன்களும், டுமினி 22 ரன்களும், பெலுக்வாயோ 25 ரன்களும், கிறிஸ் மோரிஸ் 26 ரன்களும் சேர்க்க தென்ஆப்பிரிக்கா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் குவித்தது.

இங்கிலாந்து ஆடுகளங்களில் எளிதாக 300 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் தென்ஆப்பிரிக்கா அணியும் எங்களால் 300 ரன்களுக்கு மேல் குவிக்க இயலும் என்பதை நிரூபித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து