உலகின் மிக சிறந்த மாநிலமாக மே.வங்கம் ஒரு நாள் உருவாகும் - மம்தா பானர்ஜி நம்பிக்கை

திங்கட்கிழமை, 27 மே 2019      இந்தியா
mamata-banerjee 2019 05 26

கொல்கத்தா : உலகின் மிக சிறந்த மாநிலமாக மேற்கு வங்காளம் ஒரு நாள் உருவாகும் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி டுவிட்டரில் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில்,

கடந்த 2016-ம் ஆண்டு இதே நாளில், மா, மதி, மனுஷ் அரசு 2-வது முறையாக பதவியேற்று கொண்டது. வங்காளத்தின் மக்கள் தங்களது நம்பிக்கையை எங்கள் மீது பெரிய அளவில் வைத்துள்ளனர். அவர்களுக்கு நாங்கள் நன்றி தெரிவித்து கொள்கிறோம். வருகிற நாட்களில் அவர்களுக்காக தொடர்ந்து நாங்கள் பணியாற்றுவோம். உலகின் மிக சிறந்த மாநிலமாக மேற்கு வங்காளம் ஒரு நாள் உருவாகும் என்று மம்தா பானர்ஜி அதில் தெரிவித்துள்ளார். மேற்கு வங்காளத்தில் கடந்த 2011-ம் ஆண்டு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு தலைமையிலான இடது சாரி அரசை வீழ்த்தி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தது. பின்னர் 2016-ம் ஆண்டு 2-வது முறையாக அக்கட்சி ஆட்சியை தக்க வைத்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து