முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வைகை ஆற்றில் குப்பைகள் கொட்டுவதையும் எரிப்பதையும் தவிர்க்க வேண்டும் ஆணையாளர் விசாகன் வேண்டுகோள்

செவ்வாய்க்கிழமை, 28 மே 2019      மதுரை
Image Unavailable

   மதுரை,-மதுரை மாநகராட்சி வைகை ஆற்றில் தீவிர துப்புரவுப்பணி ஆணையாளர்  ச.விசாகன் தலைமையில்  மேற்கொள்ளப் பட்டது.
மதுரை மாநகராட்சியினை தூய்மையான சுத்தமான மாநகராட்சியாக மாற்றுவதற்;க்காக பல்வேறு தூய்;மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் மதுரை மாநகராட்சி பகுதியான பெத்தானியாபுரம் காமராசர் பாலம் முதல் குருவிக்காரன் சாலை வைகை ஆற்றின்  7 கிலோ மீட்டர் தூரத்திற்கு இருபுறங்களிலும் தீவிர தூய்மைப்பணி  மேற்கொள்ளப்பட்டது. இப்பணியில் துப்புரவு பணியாளர்கள் 800 நபர்கள், துப்புரவு ஆய்வாளர்கள் 25 நபர்கள், சுகாதார ஆய்வாளர்கள் 20 நபர்கள், சுகாதார அலுவலர்கள் 3 நபர்கள், பரப்புரையாளர்கள் 50 நபர்கள், தூய்மை காவலர்கள் 34 நபர்கள், சமுதாய அமைப்பாளர்கள் 45 நபர்கள் என மொத்தம் 977 நபர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். மேலும்  16 டிராக்டர்களும், 8 ஜே.சி.பி. இயந்திரங்களும், 20 பேட்டரி வாகனங்களும் பயன்படுத்தப் பட்டது. 
மேலும் வைகை ஆற்று கரையோரம் வசிக்கும் மக்களிடம் குப்பைகளை வைகை ஆற்றில் கொட்டுவதையும், எரிப்பதையும் தவிர்க்கும் வகையிலும், பொது இடங்களில் மலம் மற்றும் சிறுநீர் கழிப்பதை தடுக்கும் வகையிலும், நீர்நிலைகளை தூய்மையாக பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்விதமாக துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டது. வைகை ஆற்று கரையோரம் வசிக்கும் மக்களுக்கு குப்பைகளை மட்கும் குப்பை மற்றும் மட்காத குப்பை என தரம் பிரித்து வழங்கும் வகையில் நீலம் மற்றும் பச்சை நிற கூடைகள் சுமார் 2000 வீடுகளுக்கு வழங்கப்பட்டது. வைகை ஆற்று கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சேரும் குப்பைகளை ஆற்றுப் பகுதிகளில் கொட்டுவதை தவிர்த்து மாநகராட்சியின் சார்பில் வழங்கப்பட்டுள்ள பச்சை மற்றும் நீல நிற குப்பை கூடைகளில் குப்பைகளை பிரித்து அங்கு தினசரி குப்பைகளை சேகரிக்க வரும் பேட்டரி வாகனங்களில் குப்பைகளை வழங்குமாறு ஆணையாளர் அவர்கள் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் வைகை ஆற்று கரையோர பகுதி மக்கள் குப்பைகளை கொட்டுவதற்கு வசதியாக தினசரி பேட்டரி வாகனங்களை இயக்குமாறும், அதிகமாக குப்பை தேங்கியுள்ள ஆற்றுப்பகுதியில் நாளையும் தீவிர துப்புரவுப்பணி மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
இந்நிகழ்ச்சியில் துணை ஆணையாளர்  ப.குமரேஸ்வரன்,  நகர்நல அலுவலர் (பொ) மரு.சரோஜா, நகரமைப்பு அலுவலர்  .ஐ.ரெங்கநாதன்,  உதவி ஆணையாளர்கள் திரு.முருகேசபாண்டியன், .பழனிச்சாமி, .நர்மதாதேவி,  பிரேம்குமார், மக்கள் தொடர்பு அலுவலர்  .சித்;திரவேல், சுகாதார அலுவலர்கள்  விஜயகுமார், .ராஜ்கண்ணன்,  சிவசுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர்கள், மாநகராட்சி பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள்  உட்பட  பலர் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து