மதகுபட்டி ஊராட்சியில் புதிய பெட்ரோல் பங்க் அமைப்பதற்கான பூமி பூஜை அமைச்சர் ஜி.பாஸ்கரன் துவக்கி வைத்தார்

சனிக்கிழமை, 1 ஜூன் 2019      சிவகங்கை
1 m

சிவகங்கை,- சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி ஊராட்சி தேசிய நெடுஞ்சாலையில் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை மூலம் சில்லறை விற்பனை மையத்திற்கான புதிய பெட்ரோல் பங்க் அமைப்பதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.ஜெயகாந்தன், தலைமை வகித்தார். கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் புதிய பெட்ரோல் பங்க் கட்டிடற்கான பூமி பூஜையினை துவக்கி வைத்து தெரிவிக்கையில்,
       இதயதெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்களின் தேவைகளை உணர்ந்து தேவைக்கேற்ப துறைவாரியாக தேவையான திட்டங்களை வழங்கிட உத்தரவிட்டு வருகிறார்கள். அதனடிப்படையில் வருவாய்த்துறையின் மூலம் பொதுமக்களுக்கு தேவையான திட்டங்கள் அவ்வப்போது உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் கூட்டுறவுத்துறைக்கு எப்பொழுதுமே சிறப்பு கவனம் எடுத்து செயல்படுவார்கள். அந்தவகையில் கூட்டுறவுத்துறை எப்பொழுதும் மக்களுடன் நேரடி தொடர்பில் உள்ள துறையாகும். கூட்டுறவுத்துறையின் மூலம்தான் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப்பொருட்கள் தங்குதடையின்றி வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்பொழுது மக்கள் மேலும் பயனடையும் விதமாக கூட்டுறவுத்துறையின் மூலமாகவே இப்பகுதியில் சில்லறை விற்பனை மையமாக புதிய பெட்ரோல் பங்க் செயல்படுவதற்கு ரூ.80 இலட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை துவக்கப்பட்டுள்ளது. இப்பணி விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு செயல்படத் துவங்கும். சுற்றுவட்டாரத்திலுள்ள 10-த்திற்கும் மேற்பட்ட கிராமமக்கள் பயன்படுவதுடன் இந்த தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களும் பயன்படுத்துவதற்கு ஏதுவாக இருக்கும். மேலும் அரசே நடத்தும்பொழுது நிர்ணயிக்கப்பட்ட விலையில் சரியான கட்டணத்தில் தங்குதடையின்றி வழங்கும்பொழுது பொதுமக்களுக்கு மிகப்பயனுள்ளதாக இருக்கும். இதேபோல் மக்களின் தேவையை உணர்ந்து இந்த அரசு சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. அதை பொதுமக்கள் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தெரிவித்தார்.
    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் க.லதா, கூட்டுறவுத்துணை இணைப்பதிவாளர் ஆரோக்கியசுகுமார், துணைப்பதிவாளர் திருவள்ளுவன், நிர்வாக அலுவலர் கிருஷ்ணன்,  சிவகங்கை வட்டாட்சியர் கண்ணன், மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர்கள் சந்திரன், சசிக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து