முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரெக்சிட்-க்கு பிறகான வர்த்தகம் குறித்து இங்கிலாந்து - அமெரிக்கா பேச்சுவார்த்தை

புதன்கிழமை, 5 ஜூன் 2019      உலகம்
Image Unavailable

லண்டன் : அமெரிக்கா - இங்கிலாந்து நல்லுறவை மேம்படுத்துவது தொடர்பாகவும், ஹவாய் செல்போன்கள் பயன்படுத்துவது தொடர்பாகவும், பிரெக்சிட் ஒப்பந்தத்தின்படி இங்கிலாந்து பிரிந்து சென்றால் அதன் பிறகான வர்த்தகம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக இருநாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

எதிர்ப்பு முழக்கம்...

இதனிடையே இங்கிலாந்துக்கு டிரம்ப் வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்காணோர், டிரஃபல்கர் சதுக்கம் அருகே திரண்டு டிரம்ப்-க்கு எதிராக முழக்கமிட்டனர். இங்கிலாந்து செல்வதற்கு முன்னதாக சண்டே டைம்ஸ் இதழுக்கு பேட்டியளித்து இருந்த டொனால்டு டிரம்ப், ”5ஜி சேவைக்காக ஹூவாய் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் இங்கிலாந்து கவனமாக இருக்க வேண்டும். ஹூவாய்க்கு மாற்றாக வேறு தயாரிப்புகளை பயன்படுத்தலாம், தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முடிவுகளை எடுக்க வேண்டும்” என்றும் கூறியிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து