முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏழுமலையானை தரிசிக்க பிரதமர் மோடி 9-ம் தேதி திருப்பதி வருகை

வியாழக்கிழமை, 6 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பிரதமர் மோடி வருகிற 9-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருப்பதிக்கு வருகை தரவுள்ளார். 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பிரதமர் மோடி வருகிற 9-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருப்பதிக்கு வருகை தருகிறார். டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு ரேணிகுண்டாவில் இறங்கி, அங்கிருந்து காரில் திருப்பதிக்கு வருகிறார். சாமி தரிசனம் செய்து விட்டு அன்று மாலை 4 மணியளவில் திருப்பதியில் இருந்து புறப்பட்டு ரேணிகுண்டா சென்று தனி விமானத்தில் டெல்லி செல்கிறார்.

பிரதமர் மோடி 2014-ம் ஆண்டு மே மாதம் தேர்தலின் போது திருப்பதியில் பிரசாரம் செய்ய வந்திருந்தார். அப்போது திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்தார். பின்னர் 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி திருப்பதிக்கு வந்து ஏழுமலையானை தரிசித்தார். 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் 3-ம் தேதி திருப்பதிக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து