முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாசா வேறு விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் - அதிபர் டிரம்ப் வேண்டுகோள்

சனிக்கிழமை, 8 ஜூன் 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : நாசா அமைப்பு நிலவுக்கு செல்வது பற்றி பேசாமல் வேறு பெரிய விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவியேற்றது முதல் பல அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நாம் செலவு செய்து வரும் அனைத்து நிதியையும் கொண்டு, நிலவுக்கு செல்வது பற்றி நாசா பேசி கொண்டிருக்க கூடாது. கடந்த 50 வருடங்களுக்கு முன்பே அதனை நாம் செய்து விட்டோம். அவர்கள் இதனை விட மிக பெரிய விசயங்களில் கவனம் செலுத்திட வேண்டும்.

கடந்த மாதம் விண்வெளி ஆய்வுக்காக கூடுதலாக 160 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான நிதியை ஒதுக்குவதற்கான ஒப்புதல் வழங்க பரிசீலனை மேற்கொண்டு வருகிறேன். இதனால் விண்வெளிக்கு நாம் ஒரு பெரிய வழியில் திரும்ப முடியும். எனது நிர்வாகத்தில், நாசாவை மிக பெரிய உச்சத்திற்கு மீண்டும் கொண்டு வருவோம். நாம் நிலவுக்கும், பின்பு செவ்வாய் கிரகத்திற்கும் செல்வோம் என்றும் அதில் அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து