முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போலி நிதி நிறுவனங்களில் இருந்து மக்கள் எச்சரிக்கையாக விழிப்புணர்வு துண்டு பிரசுரம்

ஞாயிற்றுக்கிழமை, 16 ஜூன் 2019      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், - போலி நிதி நிறுவனங்களில் இருந்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சார்பில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
ஈமு கோழி, நாட்டுக் கோழி வளர்ப்புத் திட்டம், கொப்பரை தேங்காய் திட்டம் என்ற பெயரிலும் வேறு வழிகளிலும் லாபம் கிடைக்கும் என்ற விளம்பரங்களை நம்பி மக்கள் ஏமாந்து வருகின்றனர். இவ்வாறு ஏமாற்றப்படாமல் இருக்க என்னென்ன முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பது குறித்து போலீசார் எடுத்துரைத்தனர்.
வங்கிசாரா நிதி நிறுவனங்கள் கட்டாயமாக இந்திய ரிசர்வ் வங்கியிடம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு பதிவு செய்யப்ட்ட நிதி நிறுவனங்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் குறிப்பிட்ட இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. அனைத்து நிதி நிறுவனங்களும் பொதுமக்களிடம் இருந்து பணத்தை முதலீடாக பெற முடியாது. ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் டெபாசிட் வாங்குவதற்கு அதிகாரமுள்ள நிறுவனங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. டெபாசிட் பெறும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள், அதிகபட்சமாக 5 ஆண்டு முதிர்வு காலத்திற்கு மட்டுமே டெபாசிட் பெற முடியும். இதுபோன்ற நிதி நிறுவனங்கள் அதிகபட்சமாக 12.5 சதவீதம் மட்டுமே வட்டியாக தர முடியும். இந்த நிதி நிறுவனங்கள், மக்களிடம் இருந்து டெபாசிட் பெறுவதற்காக பரிசுப் பொருட்கள் ஊக்கத்தொகை முதலியவற்றை தருவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆகவே பொதுமக்கள் தங்களிடம் உள்ள பணத்தை வங்கி சாரா நிதி நிறுவனத்தில் போடுவதற்கு முன்னால் அல்லது அதுபோன்ற நிறுவனத்திடம் இருந்து கடன் பெறுவதற்கு முன்னர் சில கேள்விகளை கேட்க வேண்டும்.
அந்த நிதி நிறுவனம் இந்திய ரிசர்வ் வங்கியிடம் பதிவு செய்யப்பட்டுள்ளதா? அவ்வாறு பதிவு செய்யப்பட்டிருந்தால் மக்களிடம் இருந்து டெபாசிட் பெறும் உரிமையுள்ள நிறுவனமாக பதிவு செய்யப்பட்டுள்ளதா? டெபாசிட் மீது அந்நிறுவனம் அளிக்கும் வட்டி 12.5 சதவீதத்திற்கு கூடுதலாக இல்லாமல் உள்ளதா? டெபாசிட்டுக்கான அதிகபட்ச முதிர்வு காலம் ஐந்தாண்டுகளுக்கு மிகாமல் இருக்கிறதா? முதலீடு பணத்திற்கு முறையான ரசீது வழங்கப்படுகிறதா? கடன் வாங்குவதாக இருந்தால் ஞிங்கள் கையெழுத்திட்ட கடன் ஒப்பந்த நகல் உங்களுக்கு தரப்படுகிறதா? என்பது போன்ற விபரங்களை கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவர்களிடம் வலியுறுத்தப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து