முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோபா அமெரிக்க கால்பந்து: காலிறுதியில் அர்ஜென்டினா

திங்கட்கிழமை, 24 ஜூன் 2019      விளையாட்டு
Image Unavailable

46-வது கோபா அமெரிக்க கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் உள்ள பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் 12 நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ‘பி’ பிரிவில் நடந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா- கத்தார் அணிகள் மோதின. இதில் அர்ஜென்டினா 2-0 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றது.

ஆட்டத்தின் 4-வது நிமிடத்தில் மார்டினஸ் முதல் கோலை அடித்தார். 82-வது நிமிடத்தில் செர்ஜியோ அகிரோ 2-வது கோலை அடித்தார். இந்த வெற்றி மூலம் அர்ஜென்டினா அந்த பிரிவில் 2-வது இடத்தை பிடித்து கால்இறுதிக்கு முன்னேறியது. அந்த அணி ஒரு வெற்றி, 1 டிரா, ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றது. பிரேசில், வெணிசுலா அணிகள் ஏற்கனவே கால்இறுதிக்கு முன்னேறி இருந்தன. அர்ஜென்டினா அணி கால்இறுதியில் வெணிசுலாவுடன் மோதுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து