உலகக் கோப்பை கிரிக்கெட்டில் போட்டியின் துல்லியத்தை அறிய பயன்படும் தொழிட்நுட்பங்கள்

புதன்கிழமை, 26 ஜூன் 2019      விளையாட்டு
WC Tect 2019 06 26

Source: provided

லண்டன் : உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் , ஆட்டத்தின் துல்லியத்தை அறிய பல்வேறு புதிய தொழிட்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் ஆட்டத்தின் துல்லியம் மற்றும் தரம் இன்னும் அதிகரிக்கிறது.

இந்தியாவில் அதிக பார்வையாளர்களை கொண்ட ஒரே விளையாட்டு கிரிக்கெட் மட்டுமே. இந்த கிரிக்கெட் போட்டியில் பல்வேறு தொழிட்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பந்து பேட்டில் பட்டதா என்பதை கண்டறியும் கருவி ,பந்தின் பாதையை கணிக்க உதவும் கருவி,பந்தின் சுழற்சியை அளக்கும் கருவி  என பல்வேறு தொழிட்நுட்பங்களுடன் கிரிக்கெட் விளையாட்டு மேம்படுத்தபட்டுள்ளது. அண்மையில் அறிமுகமான மிளிரும் 'பெய்ல்ஸ்' பாரம்பரிய விளையாட்டான கிரிக்கெட்டின் துல்லியமும், சுவாரஸ்யமும் தொழிட்நுட்பத்தின் அசுர‌ வளர்ச்சியால் பன்மடங்கு மேம்பட்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

சினிக்கோ மீட்டர்:

கணிப்பொறி அறிவியல் விஞ்ஞானியான ஆலன் பிளாஸ்கெட் என்பவரால் சினிக்கோ மீட்டர் எனப்படும் தொழிட்நுட்பம் கண்டறியப்பட்டது. 1990களின் மத்தியிலிருந்து கிரிக்கெட் விளையாட்டில் இந்த தொழிட்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. FREQUENCY எனப்படும் ஒலியின் அதிர்வெண் அடிப்படையில் இந்தத் தொழிட்நுட்பம் செயல்படுகிறது. பந்து பேட்டில் பட்டதா என்பதைக் கண்டறிய மூன்றாவது நடுவரால் இந்தத் தொழிட்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

ஹாட் ஸ்பாட்:

அகச்சிவப்பு புகைப்படத் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது ஹாட் ஸ்பாட். இது சினிக்கோ மீட்டரை விட மிகவும் துல்லியமான முடிவுகளை தரவல்லது. இந்தத் தொழில்நுட்பம் பெரும்பாலும் பந்து பேட்டில் பட்டதா என்பதைக் கண்டறியவே உபயோகிக்கப்படுகிறது.

பால் டிராக்கிங் சிஸ்டம்:

இங்கிலாந்தைச் சேர்ந்த paul hawkins, என்பவரால் BALL TRACKING SYSTEM எனப்படும் தொழில்நுட்பம் கண்டறியப்பட்டது. இது கிரிக்கெட் தவிர டென்னிஸ், கால்பந்து போன்ற விளையாட்டுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. மைதானத்தின் பல்வேறு பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள பல கேமராக்களிலிருந்து பெறப்படும் காட்சிகள், ஒருங்கிணைக்கப்பட்டு பந்தின் பாதை துல்லியமாக கணிக்கப்படுகிறது. BALL TRACKING SYSTEM தொழில்நுட்பம் பெரும்பாலும் LBW முடிவுகளுக்கு உறுதுணையாக இருக்கின்றது.

பிட்ச் விஷன்

பிட்ச் விசன் எனப்படும் தொழில்நுட்பம் வீரர்களுக்கு பயிற்சியில் பெரிதும் உதவுகிறது. பவுலர்கள் தங்களது பந்துவீச்சின் வேகம், லைன், length, ஆகியவற்றை ஆராய இந்தத் தொழிட்நுட்பம் பெரிதும் கைகொடுக்கிறது. அதே போல் பேட்ஸ்மேன்களும் தாங்கள் எந்த வகையிலான பந்துகளில் ஆட்டமிழக்கிறோம் என்பதை ஆராயவும் இது பயன்படுகிறது.

ரெவ் கவுண்ட்டர்

Rev counter எனப்படும் தொழிட்நுட்பம், பந்துகள் எந்த அளவிற்கு சுழன்று திரும்புகின்றன என்பதை பார்வையாளர்களுக்குக் துல்லியமாகக் காட்டுகிறது. ஸ்பீடு கன் எனப்படும் கருவி, பந்துகளின் வேகத்தை துல்லியமாக அளவிடப் பயன்படுகிறது. அண்மையில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான மற்றொரு கருவி, எல்இடி பெய்ல்ஸ் என்றழைக்கப்படும் மிளிரும் பெய்ல்ஸ் ஆகும். பந்து ஸ்டெம்பில் எந்தக் கணநேரத்தில் பட்டது என்பதை ஆராய இது பயன்படுகிறது. இதைத் தவிர ஸ்பைடர் கேமரா, பவுலிங் மிஷின், ஸ்டெம்ப் கேமரா உள்ளிட்ட தொழிட்நுட்பக் கருவிகளும் கிரிக்கெட் போட்டிகளில் பயன்படுத்தப்படுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து