முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மாநிலங்களவை எம்.பி.யாக வாய்ப்பு?

புதன்கிழமை, 3 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மாநிலங்களவை எம்.பி. ஆக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன்சிங் அசாம் மாநிலத்தில் இருந்து மேல்-சபை (மாநிலங்களவை) எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டிருந்தார். அவரது பதவி காலம் ஜூன் 14-ம் தேதி நிறைவடைந்தது. மீண்டும் அங்கிருந்து அவர் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு இல்லை. காரணம், அசாம் சட்டசபையில் மொத்தம் உள்ள 126 இடங்களில் காங்கிரஸ் கட்சிக்கு 25 எம்.எல்.ஏ.க்களும், கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் 13 பேரும் உள்ளனர். ஆனால், ஒரு மேல்சபை எம்.பி.யை தேர்ந்தெடுக்க 43 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. எனவே, அசாம் மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மேல்-சபை இடம் கூட கிடைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

1991-ம் ஆண்டு முதல் அசாம் மாநிலத்தில் இருந்து தான் மேல்சபை உறுப்பினராக மன்மோகன்சிங் இருந்து வருகிறார். கவுகாத்தியில் வாடகை வீட்டில் தங்கியுள்ள அவருக்கு ஓட்டும் அங்கு தான் இருக்கிறது.

இந்நிலையில், மதன் லால் சைனி எம்.பி. மறைவை அடுத்து ராஜஸ்தானில் ஒரு இடம் காலியானது. எனவே ராஜஸ்தானில் இருந்து மன்மோகன் சிங் தேர்ந்தெடுக்கப் போவது என்பது தற்போது உறுதியாகி உள்ளது. ராஜஸ்தானில் ஆளும் கட்சியாக தற்போது காங்கிரஸ் இருப்பதால் மன்மோகன் சிங் மாநிலங்களவை எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்படுவதில் எந்தவித பிரச்சினையும் இல்லை என்று அம்மாநில காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அவரது இல்லத்தில் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து