முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் டோனி ஓய்வு? செய்தி நிறுவன தகவலால் பரபரப்பு

புதன்கிழமை, 3 ஜூலை 2019      விளையாட்டு
Image Unavailable

லண்டன் : உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்கும் கடைசி போட்டியோடு டோனி ஓய்வு பெறவுள்ளதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
பதிலளித்த டோனி...

இந்திய அணியைப் பொறுத்தவரை பெரும்பாலான நேரங்களில் டோனியை சுற்றியே பேச்சு அடிபட்டுக் கொண்டிருக்கும். அவர் சிறப்பாக ஆடினாலும் சரி, மிக மோசமாக ஆடினாலும் சரி, அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் விமர்சனங்கள் அதிகமாக எழும். ஒவ்வொரு முறை விமர்சனங்கள் எழும் பொழுதெல்லாம் தன்னுடைய ஆட்டங்களால் பதிலளிப்பார் டோனி.

மீண்டும் பதிலடி...

உலகக்கோப்பைக்கு முன்னதாகவே டோனி ஓய்வு பெறுவார் என தகவல்கள் வெளியாகின. இனிமேலும் அவர் ஓய்வு பெறுவதே சிறந்தது என பலரும் கருத்து தெரிவித்தனர். ஆனால் அனைவருக்கும் தன்னுடைய பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் திறமையால் அதற்கு அவர் பதிலடி கொடுத்தார். டோனியின் அனுபவம் உலகக்கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு பெரிய உதவியாக இருக்கும் என முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர். ஆனாலும் உலகக்கோப்பை தொடங்கியது முதல் டோனியின் மீது தொடர்ந்து விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

செய்தி நிறுவனம்...

இந்நிலையில் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்கும் கடைசி போட்டியோடு டோனி ஓய்வு பெறவுள்ளதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. டோனி தரப்பில் இருந்தோ பி.சி.சி.ஐ. தரப்பில் இருந்தோ எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவராத நிலையில் பி.டி.ஐ. செய்தி நிறுவனம் டோனி ஓய்வு குறித்து செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து