போடி-மதுரை அகல ரயில் பாதை பணியினை துரிதப்படுத்த வேண்டும் மக்களவையில் தேனி எம்.பி. ப.ரவீந்திரநாத்குமார் வலியுறுத்தல்

புதன்கிழமை, 3 ஜூலை 2019      தேனி
4 RAVINDRANATH-KUMAR-

தேனி -போடி-மதுரை அகல ரயில் பாதை பணியினை துரிதப்படுத்த வேண்டும் என மக்களவையில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத்குமார் வலியுறுத்தினார்.
 இதுகுறித்து மக்களவையில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத்குமார் பேசும்போது, தேனி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மதுரை-போடிநாயக்கனூர் இடையேயான அகல ரயில் பாதை அமைப்பதற்கான பணிகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இந்த அவையின் மூலம் அரசின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்றேன். 90.41 கி.மீ தொலைவு கொண்ட இத்திட்டம் நீண்ட காலமாக தாமதமாகிக் கொண்டே வருகிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இத்தடம் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே போடி பகுதியிலிருந்து ஏலக்காய், காபி மற்றும் பிற விவசாய உற்பத்தி பொருட்களை மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்கும், ஏற்றுமதி செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 2008-09ம் ஆண்டு அகல ரயில் பாதை அமைப்பதற்காக இத்தடம் மூடப்பட்டது. அதன் பிறகு 2016ம் ஆண்டு மத்திய அரசு 302 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிக்கான ஒப்புதல் வழங்கியது. ஆனால் குறிப்பிடப்பட்ட காலத்தில் ஒப்புதல் செய்யப்பட்ட தொகையை ஒதுக்கீடு செய்யாததால் பணிகள் மிக மெதுவாகவும் மெத்தனமாகவும் நடந்து வருகின்றன. இதன் காரணமாக இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இப்பணியை விரைந்து முடித்து, ரயில் போக்குவரத்தை மீண்டும் செயல்படுத்தப்படும்பட்சத்தில், லட்சத்திற்கும் மேற்பட்டோர் தினந்தோறும் பயனடைவதோடு, ரயில்வே துறைக்கும் குறிப்பிடத்தக்க வருவாயை தரும் தடமாகவும் இருக்கும். எனவே மேலும் காலதாமதம் இல்லாமல் தேவையான நிதியை ஒதுக்கிஅகல ரயில்பாதை திட்டப் பணிகளை விரைந்து முடித்து மதுரை-போடிநாயக்கனூர் இடையேயான ரயில் போக்குவரத்தை உடனே துவக்க வேண்டும் என்று இத்தருணத்தில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என்று பேசினாh

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து