முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோபா அமெரிக்கா கால்பந்து: இறுதிக்கு முன்னேறியது பிரேசில்

புதன்கிழமை, 3 ஜூலை 2019      விளையாட்டு
Image Unavailable

பிரேசிலியா : கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினாவை வீழ்த்தி பிரேசில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

2 கோல்களுடன்...

‘கோபா’ அமெரிக்க கோப்பை கால்பந்து போட்டி பிரேசில் நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி நேற்று காலை நடந்த அரை இறுதி ஆட்டத்தில் பலம் வாய்ந்த பிரேசில் - அர்ஜெண்டினா அணிகள் மோதின. இதில் பிரேசில் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி முன்னேறியது. ஆட்டத்தின் 19-வது நிமிடத்தில் ஜீஸசும், 71-வது நிமிடத்தில் ஃபேர்மினோவும் கோல் அடித்தனர். பிரேசில் அணி இறுதி போட்டியில் சிலி அல்லது பெருவை சந்திக்கிறது. 2-வது அரை இறுதி ஆட்டம் இன்று நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து