முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நம்பிக்கைக்குரிய பட்ஜெட் பிரதமர் மோடி புகழாரம்

வெள்ளிக்கிழமை, 5 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்த பட்ஜெட் நாட்டின் முன்னேற்றத்துக்கும் மக்களுக்கும் தோழமையான அம்சங்களை கொண்டுள்ளதாகவும்,  எதிர்ப்பார்ப்பு மற்றும் நம்பிக்கைக்குரிய பட்ஜெட்டாகும் இது என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார். 

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் தொடர்பாக கருத்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, இதில் மக்களுக்கும் நாட்டின் முன்னேற்றத்துக்கும் தோழமையான அம்சங்கள் அடங்கி இருப்பதாக தெரிவித்தார். புதிய இந்தியாவுக்கான இந்த பட்ஜெட்டில் நாட்டின் வேளாண்மைத் துறையை மாற்றியமைப்பதற்கு தேவையான தொலைநோக்கு திட்டம் உள்ளதால் இது எதிர்ப்பார்ப்பு மற்றும் நம்பிக்கைக்குரிய பட்ஜெட்டாகும். ஏழைகள் பலமடைவார்கள். இளைஞர்கள் பலன் பெறுவார்கள். பசுமையான சுற்றுச்சூழல் மற்றும் பசுமை சார்ந்த எரிசக்தி ஆகியவற்றுக்கான காரணிகள் இதில் இடம்பெற்றுள்ளன. இந்த பட்ஜெட் மூலம் மத்தியத்தர வருமானம் கொண்ட பிரிவை சேர்ந்த மக்கள் முன்னேற்றம் அடைவார்கள். முன்னேற்றத்துக்கான பணிகள் விரவாக செயல்படுத்தப்படும். வரிவிதிப்பு முறைகள் எளிமையாவதுடன் உள்கட்டமைப்பு வசதிகளும் நவீனப்படுத்தப்படும் என்றும் பிரதமர் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து