20-ம் தேதி நிலவில் மனிதன் காலடி வைத்த 50-வது ஆண்டு நினைவுதினம்: அமெரிக்காவில் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு

செவ்வாய்க்கிழமை, 9 ஜூலை 2019      உலகம்
 moon 50th anniversary 2019 07 09

நிலாவில் நீல் ஆம்ஸ்ட்ராங் காலடி வைத்து 50 ஆண்டுகள் நிறைவடைய இருப்பதை முன்னிட்டு பல்வேறு கொண்டாட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

1969-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து விஞ்சானிகள் நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின், மைக்கேல் கொலின்ஸ் ஆகிய 3 பெரும் அப்போலோ ராக்கெட் மூலம் நிலவை நோக்கி பயணித்தனர். நான்கு நாட்கள் பயணத்திற்கு பின்பு ஜூலை 20-ம் தேதி நீல் ஆம்ஸ்ட்ராங் முதன் முதலில் நிலவில் காலடியை எடுத்து வைத்தார். மனிதனின் சிறிய காலடி என்ற போதும் மனிதகுலத்தின் மிகப்பெரிய காலடி என்று அப்போது ஆம்ஸ்ட்ராங் தெரிவித்தார். அந்தக் காட்சியை சுமார் 65 கோடி மக்கள் தொலைக்காட்சிகளில் கண்டுகளித்தார்கள் என்று கூறப்படுகிறது.

வரலாற்று சிறப்புமிக்க அந்த நிகழ்வின் 50-வது ஆண்டு தினம் வரும் 20-ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. அதற்காக அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொண்டாட நிகழ்ச்சிகள், விண்வெளி அறிவியல் குறித்த கருத்தரங்குகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து