தமிழகத்திற்காக போராடி பெற்ற மருத்துவ இடங்களில் வெளி மாநில மாணவர்களுக்கு வாய்ப்பு: வழங்கப்பட மாட்டாது: அமைச்சர் உறுதி

புதன்கிழமை, 10 ஜூலை 2019      தமிழகம்
minister vijayabaskar 2019 06 29

தமிழகத்திற்காக போராடி பெற்ற மருத்துவ இடங்களில் வெளி மாநில மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்றும்,  மருத்துவப் படிப்பில் சேர போலி இருப்பிட சான்று கொடுத்தால் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதிபட தெரிவித்தார்.

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், மருத்துவ படிப்பில் சேருவதற்காக வெளிமாநிலங்களைச் சேர்ந்த 218 மாணவர்கள் விண்ணப்பித்திருப்பது தெரியவந்தது. அவர்கள் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதன்மூலம் மருத்துவ கலந்தாய்வில் குளறுபடி ஏற்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது.

இந்த விவகாரம் தொடர்பாக சட்டசபையில் நேற்று தி.மு.க. சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன் மீதான விவாதத்திற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக விண்ணப்பித்த மாணவர்களில் இருப்பிட சான்றுகள் போலியாக இருந்ததால் 3616 பேரின் விண்ணப்பங்கள் ஆரம்பத்திலேயே நிராகரிக்கப்பட்டுள்ளன. தமிழகத்திற்காக போராடி பெற்ற மருத்துவ இடங்களில் வெளி மாநில மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது. மேலும் போலி இருப்பிட சான்றிதழ்கள் கொடுத்தால் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதிபட தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து