1912 இலவச எண் மூலம் பெறப்படும் புகார்களுக்கு உடனடி தீர்வு: அமைச்சர்

புதன்கிழமை, 10 ஜூலை 2019      தமிழகம்
thangamani 2019 07 10

1912 எனும் இலவச தொலைபேசி எண் மூலம் பெறப்படும் புகார் உடனுக்குடன் தீர்வு காணப்படுவதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது செம்மலை எம்.எல்.ஏ. பேசியதாவது,
பெரிய டிரான்பார்களில் 500 முதல் 600 மின் இணைப்புகள் கொடுக்கப்படுவதால், மின்தடை ஏற்படும் போது மொத்த நுகர்வோர்களும் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே பெரிய டிரான்ஸ்பார்களுக்கு பதிலாக சிறிய வகை டிரான்பார்கள் அமைத்தால் இது போன்ற பிரச்னைக்கு தீர்வு காணப்படும். மேலும் 1912 எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனை அனைத்து மாவட்ட மின் பொறியாளர் அலுவலகத்திலும் கொண்டு வர வேண்டும்.

அமைச்சர் தங்கமணி:

உறுப்பினர் குறிப்பிட்டுள்ளது போன்று சிறிய வகை டிரான்பார்களையும் தேவையான இடங்களில் அமைத்து வருகிறோம். உறுப்பினர் குறிப்பிட்டுள்ளது போன்று மின்தடை ஏற்பட்டால் 30 நிமிடங்களில் வேறு வழியில் மின்சாரம் வழங்கப்படுகிறது. ஆகவே சிறிய வகை டிரான்பார்கள் நிதிநிலைக்கு ஏற்ப பிற பகுதிகளில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 1912 எண் அறிமுகப்படுத்தப்பட்டு அது பொதுமக்களின் புகார்கள் உடனடியாக நிவர்த்தி செய்யப்படுகிறது. அது போன்று மின் பொறியாளர்கள் அலுவலகத்தில் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து