பாரதியார் பாடல் மூலம் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை பாராட்டிய ப.சிதம்பரம்

வியாழக்கிழமை, 11 ஜூலை 2019      இந்தியா
chidambaram-nirmalasitharaman 2019 07 11

புது டெல்லி : மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை பாரதியார் பாடல் வரிகள் மூலம் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பாராட்டி பேசினார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2019-20ம் ஆண்டுக்கான பட்ஜெட்டினை தாக்கல் செய்யும் போது புறநானூறு பாடல் வரிகளை மேற்கோள்காட்டி தாக்கல் செய்தார். இந்நிலையில் முன்னாள் மத்திய நிதி அமைச்சரான ப.சிதம்பரம் மாநிலங்களவையில் பேசுகையில், பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி- எனும் பாரதியார் பாடலை மேற்கோள்காட்டி நிர்மலா சீதாராமனை பாராட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து