பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் 23-ம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகிறார்.

வியாழக்கிழமை, 11 ஜூலை 2019      தமிழகம்
pm modi 2019 05 01

ஐ.ஐ.டி. நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் மோடி அத்திவரதரையும் தரிசிக்கிறார். அத்திவரதரை தரிசனம் செய்வதற்காக வரும் 23-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலமாக காஞ்சிபுரம் வருகிறார். அன்று அத்தி வரதரை தரிசனம் செய்யும் அவர், காஞ்சிபுரத்தில் தங்கி மறுநாள் காலையில் நின்ற கோலத்தில் எழுந்தருளும் அத்திவரதரை மீண்டும் தரிசனம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோடி வருகையையொட்டி காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரியில் ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டு உள்ளது. ஹெலிகாப்டர் மூலம் இங்கு வரும் மோடி, அங்கிருந்து குண்டு துளைக்காத கார் மூலம் காஞ்சிபுரம் கோவிலுக்கு செல்கிறார். மோடி வருகையையொட்டி காஞ்சீபுரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து