முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அத்திவரதரை தரிசிக்க பிரதமர் மோடி நாளை காஞ்சி வருகை

திங்கட்கிழமை, 29 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

காஞ்சீபுரம் : அத்திவரதரை தரிசிக்க 31–ந்தேதி பிரதர் மோடி காஞ்சிபுரம் வருகை தருகிறார்.

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் கடந்த 1-ம் தேதி முதல் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து வருகின்றனர். பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்கின்றனர். அத்திவரதர் முதல் 24 நாட்கள் சயன கோலத்திலும் அதன் பின்னர் 24 நாட்கள் நின்ற கோலத்திலும் தரிசனம் தருவார் என்று முதலில் கோவில் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அத்திவரதர் 31-ம் தேதி வரை சயன கோலத்திலும் அடுத்த மாதம் 1-ம் தேதி முதல் நின்ற கோலத்திலும் காட்சி தருவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி பிரதமர் நரேந்திரமோடி வருகிற 31-ம் தேதி காஞ்சிபுரம் வருகிறார். அவருடன் உள்துறை மந்திரி அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரும் வருகை தரவுள்ளனர். அங்கு சயன கோலத்தில் காட்சி தரும் அத்திவரதரை தரிசித்து விட்டு பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு செல்கிறார். அன்றைய தினம் இரவு கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் தங்குகின்றனர். மறுநாள் ஆகஸ்டு 1-ம் தேதி நின்ற கோலத்தில் காட்சி தரும் அத்திவரதரை பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் தரிசிக்கின்றனர். மோடி வருகைக்கான ஏற்பாடுகள் குறித்து பிரதமர் அலுவலக முதன்மைச் செயலாளர் சத்யபிரகாஷ் காஞ்சிபுரத்தில் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் அவர் மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவில், ஆதிவராக பெருமாள் கோவில்களில் சாமி தரிசனம் செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து