சுனாமி பேரலையாக மாறியது வாட்டர் பார்க் செயற்கை அலை - சீனாவில் 44 பேர் படுகாயம்

வியாழக்கிழமை, 1 ஆகஸ்ட் 2019      உலகம்
artificial waves china 2019 08 01

பெய்ஜிங் : சீனாவில் வாட்டர் பார்க்கில் உருவாக்கப்பட்ட செயற்கை அலை, திடீரென சுனாமி பேரலையாக மாறியதில் 44 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சீனாவில் உள்ள ஷூயூன் வாட்டர் பார்க்கில், மிகப் பெரிய நீச்சல் குளம் உள்ளது. அந்த நீச்சல் குளத்தில், செயற்கை அலையை உருவாக்கும் இயந்திரம் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. இந்த வாட்டர் பார்க்கில் நாள் ஒன்றுக்கு நூற்றுக்கும் அதிகமானோர் வருகை தருவது வழக்கமான ஒன்று. வழக்கம் போல நீச்சல் குளத்தில் 50-க்கும் மேற்பட்டோர் நீச்சல் அடித்துக் கொண்டிருந்தனர். அப்போது செயற்கை அலை உருவாக்கும் இயந்திரம், யாரும் எதிர்பாராத விதமாக மிகப் பெரிய சுனாமி பேரலையை உருவாக்கியுள்ளது. இந்த விபத்தில் 44 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அலை உருவாக்கும் இயந்திரத்தை இயக்கியவர், இயந்திரத்தை சரியாக இயக்காததே இந்த விபத்துக்கு காரணம் என சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வாட்டர் பார்க் மூடப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து