கங்குலியை பின்னுக்குத் தள்ளி அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 2-வது இடம் பிடித்தார் விராட் கோலி

திங்கட்கிழமை, 12 ஆகஸ்ட் 2019      விளையாட்டு
ganguly-virat kohli 2019 08 12

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 2-வது ஆட்டத்தில் 120 ரன்கள் அடித்த விராட் கோலி கங்குலி சாதனையை முறியடித்துள்ளார்.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி  டிரினிடாட்டில் நடைபெற்றது. இதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 120 ரன்கள் குவித்தார். இதுவரை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி 11406 ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம் கங்குலி அடித்திருந்த 11363 ரன்களை தாண்டி அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்துள்ளார். சச்சின் தெண்டுல்கர் 18426 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார். ராகுல் டிராவிட் 10899 ரன்களுடன் 4-வது இடத்திலும், டோனி 10773 ரன்களுடன் 5-வது இடத்திலும் உள்ளனர்

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து