முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி, பிரதமருக்கு ரஷ்ய அதிபர் சுதந்திர தின வாழ்த்து

வியாழக்கிழமை, 15 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

நாட்டின் 73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 73-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு சிறப்புரை ஆற்றினார்.  இதே போல், இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் அப்பகுதி கவர்னர்கள் தேசிய கொடியேற்றி வைத்தனர். இந்நிலையில், ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் 73-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்தியாவின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து