பதவி விலகுவதாக பிரிட்டன் நாடாளுமன்ற சபாநாயகர் ஜான் பெர்கோவ் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 10 செப்டம்பர் 2019      உலகம்
speaker John Berkow 2019 09 10

லண்டன் : பிரிட்டன் நாடாளுமன்றத்தின் மக்களவைத் தலைவர் ஜான் பெர்கோவ், அக்டோபர் மாத இறுதியில் பதவி விலக போவதாக அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற விதிகளை மதிப்பிழக்கச் செய்யும் வகையில் ஜான் பெர்கோவ் அவற்றை தவறாகப் பயன்படுத்தியதாக பிரெக்ஸிட் எதிர்ப்பாளர்கள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அவர் இந்த முடிவை மேற்கொண்டுள்ளார்.

பிரிட்டன் மக்களவையில் கடந்த 10 ஆண்டுகளாக அவர் அவை தலைவராக பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில், அதில் தாம் போட்டியிடப்போவதில்லை என்று கூறியுள்ள அவர், அவ்வாறு இடைக்காலத் தேர்தல் நடக்காவிட்டாலும் அக்டோபர் 31-ம் தேதி தாம் ராஜிநாமா செய்ய போவதாக அறிவித்துள்ளார்.

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகும் நடைமுறை அக்டோபர் 31 தொடங்குகிறது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து