முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரான்சில் தஞ்சம் கேட்டு ஸ்னோடென் மீண்டும் மனு

திங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2019      உலகம்
Image Unavailable

பாரிஸ் : அமெரிக்கா பிறநாடுகளை கண்காணித்த ரகசிய கோப்புகளை அம்பலப்படுத்திய எட்வர்ட் ஸ்னோடன் பிரான்ஸ் நாட்டில் தஞ்சம் கேட்டு மீண்டும் மனு செய்துள்ளார்
அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வில் பணியாற்றிய எட்வர்ட் ஸ்னோடென் மிகவும் இரகசியமாக பாதுகாக்கப்பட்ட அமெரிக்க இராணுவ ரகசியங்கள் மற்றும் வெளியுறவுத்துறை ரகசிய கோப்புகளை பகிரங்கமாக வெளியிட்டார்.இதையடுத்து, கைது செய்யப்படும் அபாயம் ஏற்பட்டதால் அமெரிக்காவை விட்டு வெளியேறினார்.அமெரிக்கா ரகசியமாக நட்பு நாடுகளை கண்கானித்த விவகாரத்தை ஸ்னோடென் வெளியிட்டதால் அமெரிக்காவுக்கு அதன் நட்பு நாடுகளிடம் இருந்து பெரும் நெருக்கடி ஏற்பட்டது.

தற்போது ரஷியாவில் அடைக்கலம் புகுந்துள்ள எட்வர்ட் ஸ்னோடென் இதற்கு முன்னர் சில ஐரோப்பிய நாடுகளிடம் தஞ்சம் கேட்டிருந்தார். அவ்வகையில், கடந்த 2013-ம் ஆண்டில் பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலன்டே-விடம் முன்னர் தஞ்சம் கேட்டு விண்ணப்பித்திருந்தார். ஆனால், அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதற்கிடையில், அமெரிக்காவில் இருந்து வெளியேறிய பினனர் தனது வாழ்க்கையில் சந்தித்த நிகழ்வுகளை பற்றி எட்வர்ட் ஸ்னோடென் புத்தகம் எழுதியுள்ளார். இந்த புத்தகம் வரும் இன்று  (17-ம் தேதி) 20 நாடுகளில் வெளியாகிறது.இந்நிலையில், பிரான்ஸ் நாட்டிடம் தஞ்சம் கேட்டு அந்நாட்டின் அதிபர் எம்மானுவேல் மேக்ரானிடம் எட்வர்ட் ஸ்னோடென் மீண்டும் மனு செய்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து