முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசின் திட்டங்களை கெடுக்கும் கூட்டமாக திமுக தலைமை முதல் தொண்டர்கள்வரை உள்ளனர். அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டு

புதன்கிழமை, 18 செப்டம்பர் 2019      விருதுநகர்
Image Unavailable

விருதுநகர், -, அரசின் திட்டங்களை கெடுக்கும் கூட்டமாக திமுக தலைமை முதல் தொண்டர்கள்வரை உள்ளனர் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டி பேசினார்.
விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் , தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆலோசனையின் பேரில் விருதுநகர் மாவட்டம் முழுவதிலும்  அண்ணா பிறந்த நாள்விழா கொண்டாடப்பட்டது. விருதுநகரில் நகரம் கிழக்கு மேற்கு ஒன்றிய கழகம் சார்பாக அண்ணா பிறந்த நாள்விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக விருதுநகர் மாவட்ட கழக செயலாளர், தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி,, சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்ஆர்.ராஜவர்மன், தலைமை கழக பேச்சாளர்கள் முத்து, அறந்தை முருகேசன் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பேசும்போது, அண்ணாவின் கனவுகளை நினைவாக்கியவர் எம்ஜிஆர். அண்ணா, எம்ஜிஆர் கண்ட கனவுகளை நினைவாக்கியவர் ஜெயலிலதா. ஏழைகளே இல்லாத தமிழகத்தை உருவாக்கியே தீருவேன் என்று திட்டங்களை செயல்படுத்தியவர் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் திட்டங்கள், சட்டங்கள் அனைத்தும் இன்று நடைமுறை படுத்தப்பட்டு வருகின்றன. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் இனைந்து தமிழகத்தில் நல்லாட்சி நடத்திக்கொண்டு இருக்கின்றனர். ஏழை மக்கள், பட்டாளி மக்கள், விவசாயிகள் பயன்படக்கூடிய வகையிலும்,  யாருக்கும் பாதிப்பில்லாத நல்லாட்சியை கொடுத்து வருகின்றனர். அண்ணா பிறந்த நாளை கொண்டாடும் தகுதி அதிமுகவிற்கு மட்டுமே உண்டு. ஏழை எளிய மக்கள், பட்டாளி, படைப்பாளி மக்கள் மனதில் நீங்கா நிலைத்து நிற்கும் சின்னம் இரட்டை இலை சின்னம்தான். அதிமுக எனக்கு பின்னாலும் 100 ஆண்டுகள் ஆளும் என்று ஜெயலலிதா கூறினார்கள். ஜெயலலிதாவின் வழிகாட்டுதல்படி தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. அன்னதானம் திட்டம், தங்கத்திற்கு தாலி, அம்மா உணவகம், அம்மா குடிநீர், விலையில்லா பேன், விசிறி, கிரைண்டர், ஆடுமாடுகள் வழங்கும் திட்டம் என எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியவர் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் ஆட்சி 100 ஆண்டுகள் நிலைத்து நீடிக்க அண்ணா பிறந்த நாளில் நாம் சபதம் ஏற்போம். அதிமுகவில் மட்டும்தான் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாத தொண்டர்கள் கூட்டம் செயல்பட்டு வருகின்றது. அரசால், கட்சியால் எந்த ஒரு திட்டத்தையும் பெறாமல் எதிர்பார்க்காமல் இரட்டை இலையை தாக்கி பிடித்து உழைக்கின்ற கூட்டம் அண்ணா திமுகவில் உண்டு. இந்த கட்சியை எந்த கொம்பனாலும் அசைத்துகூட பார்க்க முடியாது. எங்கள் எம்எல்ஏக்கள் 20பேரை தூக்கிவிடுவோம் என்று ஸ்டாலின் கூறுகின்றார். எடப்பாடியார் கண் அசைத்தால் 60 திமுக எம்எல்ஏக்களை நாங்கள் தூக்கி விடுவோம். இந்த ஆட்சியை ஸ்டாலினால் தொட்டுக்கூட பார்க்க முடியாது. வரும் 2021 லும் அதிமுகவே மீண்டும் ஆட்சி அமைக்கும் எடப்பாடியார் மீண்டும் தமிழக முதல்வராக பொறுப்பேற்பார். அதிமுகவிற்கு எங்கு பார்த்தாலும் மக்கள் செல்வாக்கு அதிகரித்துக்கொண்டே வருகின்றது. ,இது ஒரு ஆண்மீக கட்சி. அனைத்து சமுதாய மக்களும் ஏற்றுக்கொண்ட கட்சி. வெளிநாடு சென்று வந்ததிற்கு ஸ்டாலின் வெள்ளை அறிக்கை கேட்கின்றார். வெள்ளரிக்காய் கூட கொடுக்க மாட்டோம் என்று கூறி விட்டோம். வெளிநாடு செல்லும் போதும் சென்று வந்த பிறகும் தமிழக முதல்வர் தெளிவாக அறிக்கை கொடுத்துள்ளார். மக்கள் எங்களை பற்றி புரிந்து கொண்டார்கள். ஸ்டாலின் கூக்குரல் இடுகின்றார். மழை வந்தாலும் வெள்ளம் வந்தாலும் மழை பெய்யாவிட்டாலும் எல்லாதிற்கும் காரணம் எடப்பாடியார்தான் என்று ஸ்டாலின் கூறி வருகின்றார். இந்த ஆட்சி மீது ஏதாவது குறை சொல்ல வேண்டும் என்பதற்காக குறையை மட்டும் கூறி வருகின்றார். 2ஏக்கர் நிலம் தருவோம் என்று கூறியது போல போலியாக வாக்குறுதிகளை கொடுத்து எம்பி தேர்தலில் திமுகவினர் வெற்றிபெற்றுவிட்டனர். கல்விக்கடன் ரத்து செய்வோம், விவசாய கடன் ரத்து செய்வோம் என்று போலியான வாக்குறுதிகளை நம்பி திமுகவிற்கு மக்கள் வாக்களித்து விட்டனர். ஆனால் வேலூர் தொகுதி மக்கள் அதிமுகவின் செல்வாக்கை நிறுபித்து வி்ட்டனர். இன்னும் நாங்கள் கொஞ்சம் சுதாரித்து பணியாற்றி இருந்தால் வேலூர் தொகுதியை கைப்பற்றி இருப்போம். துறைமுருகன் சொந்த ஊரில் அவரால் 20 வாக்குகள் மட்டுமே அதிகமாக பெற முடிந்தது. திமுகவிற்கு அரசியல் வாழ்வு முடிந்து விட்டது. ஸ்டாலினுக்கு முதல்வர் பதவி யோகம் கிடையாது. ஒரு கட்சி என்ற அளவில் மட்டும் திமுக இயங்க முடியும். அதிமுகவில் இளைஞர்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. அதிமுகவின் வளர்ச்சி அபாரமாக இருக்கும். நாங்கள் வேண்டாம் என்று கூறியவர்கள்தான் திமுகவில் சேர்ந்துள்ளனர். மொட்டை பெட்டிசன் போடுகின்ற கூட்டமாக திமுக கட்சியினர் உள்ளனர். அரசின் திட்டங்களை கெடுக்கும் கூட்டமாக திமுக தலைமை முதல் தொண்டர்கள்வரை உள்ளனர். திமுகவில் மன்னராட்சிதான் நடைபெற்று வருகின்றது. அதிமுகவில் மட்டும்தான் சாதாரண தொண்டனும் சரித்திரித்தில் இடம் பிடிக்க முடியும். உழைக்கின்ற தொண்டர்களுக்கு மதிப்பு கொடுக்கின்ற கட்சி அதிமுக மட்டும்தான். வரும் உள்ளாட்சி தேர்தலில் விருதுநகர் மாவட்டம் அதிமுகவின் எக்கு கோட்டை என்பதை நிறுபித்து காண்பிப்போம். தலைவர், துணைத்தலைவர், கவுன்சிலர் உட்பட அனைத்து பதவிகளையும் அதிமுகதான் கைப்பற்றும். வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் நல்லாட்சி கொடுத்து வரும் அதிமுகவிற்கு வாக்காளர்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசினார்.
 என்று பேசினார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் மூக்கையா, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் மச்சராஜா, முன்னாள் யூனியன் தலைவர் கலாநிதி, பொதுக்குழு உறுப்பினர்கள் பாபுராஜ், மாவட்ட மாணவரணி செயலாளர் நல்லதம்பி, மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் ஆரோக்கியம், மாவட்ட மகளிரணி செயலாளர் சுடர்வள்ளி, துணைத்தலைவர் சரஸ்வதிசந்திரசேகர்,  மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் பாண்டியராஜன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வக்கீல் முத்தப்பாண்டியன், மாவட்ட சிறுபாண்மையினர் நலப்பிரிவு செயலாளர் சையதுசுல்தான்இப்ராஹீம்,மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி துணை செயலாளர் முனீஸ்வரன், விருதுநகர் மாவட்ட பொருளாளர் தேவர்(எ)கூத்தபெருமாள், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர்கள் ராஜசேகர், காசிராஜன், ஒன்றிய செயலாளர்கள் விருதுநகர் கண்ணன், தர்மலிங்கம், நகர செயலாளர் முகமது நெய்னார், சிவகாசி ஒன்றிய செயலாளர்கள் பலரம், புதுப்பட்டி கருப்பசாமி, வேண்டுராயபுரம் சுப்பிரமணியன், சாத்தூர் ஒன்றிய செயலாளர்கள் சண்முகக்கனி, தேவதுரை, வெம்பக்கோட்டை ஒன்றிய செயலாளர் ராமராஜ்பாண்டியன், ராஜபாளையம் ஒன்றிய செயலாளர்கள் வேல்முருகன், குருசாமி, திருவில்லிபுத்தூர் ஒன்றிய செயலாளர் மயில்சாமி, வத்ராப் ஒன்றிய செயலாளர் சுப்புராஜ், சேதுராமலிங்கம், அருப்புக்கோட்டை ஒன்றிய செயலாளர்கள் சங்கரலிங்கம், வெங்கடேஷ், நரிக்குடி ஒன்றிய செயலாளர்கள் பூமிநாதன், ரவிச்சந்திரன், திருச்சுழி ஒன்றிய செயலாளர்கள் பூமிநாதன், முனியாண்டி.  காரியாபட்டி ஒன்றிய செயலாளர்கள் முருகன், ராமமூர்த்திராஜ், திருத்தங்கல் நகர செயலாளர் பொன்சக்திவேல், ராஜபாளையம் நகர செயலாளர் பாஸ்கரன், திருவில்லிபுத்தூர் நகர செயலாளர் பாலசுப்பிரமணியன்  உட்பட கட்சியின் அனைத்து சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்ட ஏற்பாடுகளை விருதுநகர் நகர செயலாளர் முகம்மதுநெய்னார் ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், தர்மலிங்கம் செய்திருந்தனர்.. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து