முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வளர்ந்த நாடுகளுக்கு இணையான மருத்துவ வசதியை உருவாக்க தமிழகம் முயன்று வருகிறது - அமைச்சர் சி விஜய பாஸ்கர் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 22 செப்டம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : சாதாரண மனிதர்களுக்கு குறைந்த விலையில் மேம்பட்ட தொழில்நுட்பங்களை அணுகுவதற்கான வழிகளையும் வழிமுறைகளையும் பயன்படுத்த வேண்டும். மேலும் வளர்ந்த தேசத்தின் சுகாதார குறிகாட்டிகளுடன் இணையாக மாநிலத்தை உருவாக்க தமிழகம் செயல்பட்டு வருவதாக க டாக்டர் சி விஜய பாஸ்கர் தெரிவித்தார். சென்னையில் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள தமிழக மருத்துவ மதிப்பு பயணம் குறித்த மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது,

விக்டோரியா அரசாங்கத்துடன் தமிழக சுகாதாரத் துறை கடந்த ஆண்டு அவசர சிகிச்சை பராமரிப்பு பயிற்சிகான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதனால் சுகாதாரத்துறையில் ஆஸ்திரேலியா அவசர சிகிச்சை இறப்பு விகிதத்தைக் குறைக்க உதவியது. எண்ணிக்கையை பொறுத்தவரை, 4300-க்கும் மேற்பட்ட நோயாளிகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. மருத்துவமனைகளின் சர்வதேச தரம், நிபுணர் மருத்துவர்கள், தரம் மற்றும் மலிவு செலவுகள், சமீபத்திய தொழில்நுட்பங்கள் கிடைப்பது ஆகியவை தமிழக மாநிலத்தை சுகாதார சேவைகளில் முதலிடம் வகிக்கின்றன. தமிழக சுகாதார அமைப்பு முறை சீர்திருத்த திட்டத்திற்காக தமிழக அரசு சமீபத்தில் உலக வங்கியுடன் ரூ .3000 கோடிக்கும், ஜிகாவுடன் ரூ .1684 கோடிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இது மாநிலத்தில் சுகாதார வசதிகளை மேலும் மேம்படுத்தும் என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்,  சுகாதார சுற்றுலா தொடர்பான சி.ஐ.ஐ. தமிழ்நாடு பணிக்குழுவின் கன்வீனர் டாக்டர் எஸ். சந்திரகுமார்,. சி.ஐ.ஐ தமிழகத்தின் தலைவர் எஸ். சந்திரமோகன் மற்றும் பலர் கலந்து கொணடனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து