முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுத்துறை ஊழியர்களுக்கு 10 சதவீதம் தீபாவளி போனஸ்

ஞாயிற்றுக்கிழமை, 29 செப்டம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : மாநில பொதுத்துறை அலுவலகங்களில் பணியாற்றும் தகுதியான ஊழியர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக நிதித் துறைச் செயலர் எஸ்.கிருஷ்ணன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் குரூப் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு ஊழியர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 1.67 சதவீதம் ஊக்கத் தொகை என 10 சதவீத போனஸ் வழங்கப்படும்.முன்னதாக, கடந்த 1961-ம் ஆண்டு சட்டப்படி போனஸ் பெறுவதற்கான ஊதிய உச்ச வரம்பு ரூ.7 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்நிலை யில், இந்த உச்சவரம்பு தற்போது ரூ. 21 ஆயிரமாக உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநில போக்குவரத்து கழகங்கள், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம், தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல் கழகம், பூம்புகார் கப்பல் கழகம், தேயிலை தோட்டக் கழகம், அரசு ரப்பர் கழகம், தமிழ்நாடு வனத் தோட்டக் கழகம் ஆகிய நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு தனியாக உத்தரவுகள் வெளியிடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து