முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பன்றிக் காய்ச்சல் எதிரொலி: 20,000 பன்றிகளை கொன்று குவித்தது பிலிப்பைன்ஸ் அரசு

செவ்வாய்க்கிழமை, 1 அக்டோபர் 2019      உலகம்
Image Unavailable

மணிலா : பிலிப்பைன்சில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் நாடு முழுவதும் பரவி வரும் காரணத்தால் 20,000 பன்றிகளை அந்நாட்டு அரசு கொன்று குவித்துள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. இதனால் பொதுமக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்து வந்த போதிலும் நோயின் வீரியத்தை கட்டுப்படுத்த இயலவில்லை. இதையடுத்து நோய் ஏற்பட காரணமாக பன்றிகளை அந்நாட்டு அரசு கொன்று குவிக்கத் தொடங்கி உள்ளது.

இது குறித்து பிலிப்பைன்ஸ் வேளாண்துறை செயலர் வில்லியம் தார் கூறுகையில், பன்றி பண்ணைகள் சரியாக பரமரிப்பு இல்லாமல் இயங்குவதே நோய் பரவுவதற்கு முக்கிய காரணமாகும். தற்போதைய நிலவரப்படி, 20,000 பன்றிகள் கொல்லப்பட்டுள்ளன. அவற்றில் 6,600 பன்றிகள் நோயால் பாதிக்கப்பட்டவை. மீதம் உள்ள பன்றிகள் நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக கொல்லப்பட்டுள்ளன. அதிகபட்சமாக புலாகான் மாகாணத்தில் இருந்து அதிக பன்றிகள் கொல்லப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். பிலிப்பைன்சில், ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவுவதைத் தடுக்க அந்நாட்டு அரசு 1-7-10 என்ற நெறிமுறையை செயல்படுத்துகிறது, அதாவது பாதிக்கப்பட்ட பண்ணைகளின் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்து பன்றிகளை அகற்றுதல், 7.கி.மீ சுற்றளவில் பன்றிகளின் விற்பனை மற்றும் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துதல், 10 கி.மீ சுற்றளவில் உள்ள பன்றி பண்ணைகள் நோய் குறித்த கட்டாய அறிக்கையை சமர்ப்பித்தல் போன்றவை அந்த நெறிமுறைகளில் அடங்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து