முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் வன்முறை: அமெரிக்க பெண் எம்.பி. குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 1 அக்டோபர் 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : காஷ்மீரில் வன்முறை, மருத்துவ வசதி மறுப்பு பற்றிய அறிக்கைகள் வந்துள்ளன என அமெரிக்க நாடாளுமன்ற பெண் உறுப்பினர் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் அமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவை கடந்த ஆகஸ்டு 5-ம் தேதி ரத்து செய்து, மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து மத்திய அரசு அறிவித்தது. இதனால் காஷ்மீரில் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணுவம் குவிக்கப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இதனிடையே, காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கத்திற்கு பின் வன்முறை, தொலை தொடர்பு மற்றும் மருத்துவ வசதி மறுப்பு ஆகியவை பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன என அமெரிக்க நாடாளுமன்ற பெண் உறுப்பினரான ஜனநாயக கட்சியை சேர்ந்த அலெக்சாண்டிரியா அகேசியோ - கார்டிஜ் குற்றம்சாட்டியுள்ளார். பாகிஸ்தான் ஆதரவு பிரசாரகர் ஒருவர் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான பதிவுகளை டுவிட்டரில் வெளியிட்டு வருகிறார். அவர், இம்ரானுக்கு ஆதரவு, காஷ்மீருக்கு ஆதரவு என்பன போன்ற ஹேஷ்டேக்குகளுடன் தனது பதிவை வெளியிட்டுள்ளார். அவற்றில் ஒரு பதிவில், காஷ்மீருக்கு ஆதரவான ஒற்றுமை பேரணி மேற்கொண்டதற்காக அலெக்சாண்டிரியாவுக்கு தனது நன்றியை தெரிவித்து கொண்டுள்ளார். அதனுடன் ஜனநாயக கட்சியின் மற்ற பெண் உறுப்பினர்களான இல்ஹான் உமர் மற்றும் ரஷீதா லெய்ப் ஆகிய சிறுபான்மையின பின்னணி கொண்ட அமெரிக்கவாழ் பெண்களையும் ஹேஷ்டேக்கில் குறிப்பிட்டு உள்ளார். அவரது பதிவை அலெக்சாண்டிரியா தனது டுவிட்டரில் மறுபதிவிட்டு உள்ளார். அந்த வீடியோ பதிவில், காஷ்மீர் மக்களின் அடிப்படை மனித கண்ணியத்திற்காக நாங்கள் துணை நிற்கிறோம். அங்குள்ள அனைவருக்கும் ஜனநாயகம், சமத்துவம் மற்றும் மனித உரிமைகள் கிடைக்க வேண்டும் என நாங்கள் ஆதரவு வழங்குகிறோம். வன்முறை மற்றும் சித்திரவதை ஆகியவை பற்றி வரும் தகவல்கள் வருத்தத்திற்குரியவை. தொலைதொடர்பு துண்டிப்பு மற்றும் உயிர் காக்கும் மருத்துவ உதவி நிறுத்தம் ஆகியவை முடிவுக்கு வரவேண்டும் என தெரிவித்து உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து