முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

150 ரூபாய் காந்தி நினைவு நாணயம் பிரதமர் மோடி வெளியிட்டார்

புதன்கிழமை, 2 அக்டோபர் 2019      இந்தியா
Image Unavailable

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் அவரது உருவம் பொறிக்கப்பட்ட 150 ரூபாய் நாணயத்தை குஜராத்தில் நடந்த விழாவில் பிரதமர் மோடி நேற்று வெளியிட்டார்.

காந்தி ஜெயந்தி தினமான நேற்று குஜராத் மாநிலத்தில் சபர்மதி நதிக்கரை ஓரத்தில் காந்தி வாழ்ந்த சபர்மதி ஆசிரமத்தில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து விமானம் மூலம் அகமதாபாத் நகருக்கு சென்றார். அகமதாபாத் விமான நிலையம் அருகே பா.ஜ.க.வினர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். வரவேற்பு நிகழ்ச்சிக்கு பின்னர் சபர்மதி ஆசிரமத்துக்கு சென்ற மோடி, அங்கு காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்தார். அங்குள்ள அருங்காட்சியகத்தை பார்வையிட்ட மோடி, தூய்மை இந்தியா தொடர்பான விழாவில் பங்கேற்றார். குஜராத் மாநில முதல்வர் விஜய் ருபானியும் பங்கேற்ற இவ்விழாவில் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் அவரது உருவம் பொறிக்கப்பட்ட 150 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து