முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெளிநாட்டு சக்திகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளவே ஏவுகணை சோதனை ; வடகொரியா விளக்கம்

வியாழக்கிழமை, 3 அக்டோபர் 2019      உலகம்
Image Unavailable

சியோல் : வெளிநாட்டு சக்திகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளவே ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது என வடகொரியா தெரிவித்துள்ளது. 

கொரிய எல்லையில் அமெரிக்கா மற்றும் தென்கொரிய ராணுவ படைகள் கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுவதற்கு வடகொரியா எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் இரு நாடுகளும் அதனை மீறின. இதனால் கடந்த ஜூனில், அமெரிக்கா மற்றும் வடகொரியா தலைவர்கள் மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
எனினும், இதன்பின்பு வடகொரியா தொடர்ந்து பல்வேறு ரகங்களிலான ஏவுகணைகளை பரிசோதனை செய்து உலக நாடுகளுக்கு அதிர்ச்சி அளித்தது. ஆனால், அவை சிறிய ரக ஏவுகணைகள் என்று டிரம்ப் கூறியதுடன், கிம் ஜாங் உடனான நட்புறவு நல்ல முறையில் உள்ளது என்றும் கூறினார்.

இதற்கு மத்தியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, அணு ஆயுத பிரச்சினையால் முடங்கியிருக்கும் இருதரப்பு உறவை புதுப்பிக்க அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் துணிச்சலான ஒரு முடிவை எடுக்க வேண்டுமென வடகொரியா தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், அணு ஆயுத சோதனை அழிப்பு தொடர்பாக அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே அக்டோபர் 5ந்தேதி பேச்சுவார்த்தை நடைபெறும் என தகவல் வெளியானது. இதற்கு இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளன என்றும் வடகொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இந்த சூழலில், வடகொரியா நாட்டின் வன்சான் நகரில் கிழக்கு கடற்பகுதியில் (ஜப்பானிய கடல் பகுதி) இரண்டு ஏவுகணைகளை நீர்மூழ்கி கப்பலில் இருந்து வடகொரியா விண்ணில் ஏவி நேற்று பரிசோதனை செய்தது. அவற்றில் ஒன்று ஜப்பானின் சிறப்பு பொருளாதார மண்டல பகுதியில் விழுந்தது.

இதற்கு முன்பு கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் குறுகிய தொலைவு ஏவுகணைகளை அந்நாடு பரிசோதனை செய்து வந்துள்ளது அறியப்பட்டு இருந்தது. ஆனால், இந்த ஏவுகணையின் ரகம் பற்றிய விவரம் சரியாக தெரியவில்லை என்று ஜப்பான் அரசு தெரிவித்தது.

வேறு ஏவுகணைகள் ஏதும் ஏவப்படுகின்றனவா? என்று எங்களுடைய ராணுவம் நிலைமையை கண்காணித்து வருவதுடன், தயார் நிலையிலும் உள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.

இந்த ஏவுகணை பரிசோதனை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறிய செயல். இதற்கு நாங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிப்பதுடன், கடும் கண்டனமும் தெரிவிக்கின்றோம் என ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே செய்தியாளர்களிடம் கூறினார்.

கடந்த 3 வருடங்களில் நீர்மூழ்கி கப்பலில் இருந்து வடகொரியா ஏவுகணை பரிசோதனை செய்வது என்பது இதுவே முதல்முறை.

வெளிநாட்டு சக்திகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளவும், நாட்டின் ராணுவ பலம் அதிகரிக்கவும் இந்த ஏவுகணை பரிசோதனை நடைபெற்றது என வடகொரியா தெரிவித்துள்ளது. இந்த சோதனை வெற்றி பெற்றது முக்கிய சாதனை என்றும் அந்நாடு தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து