முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு

வியாழக்கிழமை, 3 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : டாஸ்மாக் ஊழியர்களுக்கு இந்தாண்டு தீபாவளி போனஸ் 20 சதவீதம் வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது 8.33 சதவீத போனசும், 11.67 சதவீத கருணை தொகையும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளில் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் என பலர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு தீபாவளியையொட்டி போனஸ் வழங்கப்படுவதாக தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தாண்டு டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. டாஸ்மாக் உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.16,300, மற்ற ஊழியர்களுக்கு ரூ.16,800 போனஸ் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த போனஸ் தொகை டாஸ்மாக் பணியாளர்களின் வங்கி கணக்கில் உடனடியாக வரவு வைக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து