டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் முறைகேடு நடக்கவில்லை: விசாரணை கமிட்டி அறிக்கையில் தகவல்

வெள்ளிக்கிழமை, 4 அக்டோபர் 2019      விளையாட்டு
SPORTS-4-2019 10 04

Source: provided

சென்னை : டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்று விசாரணை கமிட்டி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதம் நடந்தது. இதில் சில முதல் தர கிரிக்கெட் வீரர்களை சூதாட்டத்தில் ஈடுபட வைக்க சந்தேகப்படும் நபர்கள் அணுகியதாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவு புகார் தெரிவித்து இருந்தது. இந்த சர்ச்சை குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நியமித்த 3 பேர் கொண்ட கமிட்டி விசாரணை நடத்தியது.

இந்த விசாரணை கமிட்டி தனது அறிக்கையை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திடம் தாக்கல் செய்து இருக்கிறது. இது குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ஆர்.எஸ்.ராமசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், டி.என்.பி.எல். சர்ச்சை குறித்து விசாரணை கமிட்டி தாக்கல் செய்த அறிக்கையை நாங்கள் முழுமையாக படித்து பார்த்தோம். அதில் நடவடிக்கை எடுக்கக் கூடிய அளவுக்கு எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையை ஏற்றுக் கொள்ள நாங்கள் முடிவு செய்துள்ளோம். அந்த கமிட்டி டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி நேர்மையான முறையில் நடைபெற்று வருவதை நிலைநிறுத்தவும், நம்பகத்தன்மையை காக்கவும் சில பரிந்துரைகளை செய்து இருக்கிறது. அதனை நாங்கள் பின்பற்றுவோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து