முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக மகளிர் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டி: அரையிறுதிக்குள் நுழைந்த மேரி கோம்

வியாழக்கிழமை, 10 அக்டோபர் 2019      விளையாட்டு
Image Unavailable

உலான் உடே : உலக மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மேரி கோம் அரையிறுதிக்கு வெற்றிகரமாக நுழைந்திருக்கிறார்.

ரஷ்யாவின் உலான் உடேயில் குத்துச் சண்டை உலக சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. இதில் 6 முறை உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற இந்தியாவின் மேரிகோம் கலந்து கொண்டுள்ளார். இதில் 51 கிலோ எடைப் பிரிவில் தாய்லாந்து வீராங்கனை ஜுடாமஸ் ஜிட்போங்கை 5-0 என்ற புள்ளி கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறிய மேரி கோம். தற்போது அதே எடை பிரிவில் காலிறுதியில் ரியோ ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற கொலம்பிய வீராங்கணை இங்க்ரிட் வலென்சியா 5 - 0 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார் மேரி கோம். அரையிறுதி போட்டி வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. உலக குத்து சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் பிரிவில் வெற்றியாளராக வலம் வரும் மேரி கோம் இந்த முறையும் பட்டம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 6 முறை உலகக் குத்துச்சண்டையில் தங்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற வரலாற்றை நிகழ்த்தியவர் மேரி கோம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து