முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலாச்சாரம், விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற தமிழ்நாட்டுக்கு ஜின் பிங் வந்திருப்பதில் மகிழ்ச்சி பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

வெள்ளிக்கிழமை, 11 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

சீன அதிபர் ஜி ஜின் பிங்கை தமிழ்நாடு உபசரிப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்தியா - சீனா இடையிலான உறவு முறைசாரா உச்சி மாநாட்டின் மூலம் மேலும் வலுப்பெறட்டும் என்றும் கலாச்சாரம், மற்றும் விருந்தோம்பலுக்கு பெயர்பெற்ற மாபெரும் மாநிலமான தமிழ்நாட்டுக்கு வந்திருப்பதில் பெருமகிழ்ச்சி என்றும் பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். முன்னதாக சீன அதிபர் ஜி ஜின் பிங்கை சந்திக்க பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார்.

சென்னை வந்தடைந்த பிரதமர் மோடியை கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் வரவேற்றனர். மேலும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், கூட்டணி கட்சி தலைவர்கள் வாசன், பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.

இந்த வரவேற்புக்கு பின்னர் ஹெலிகாப்டரில் பிரதமர் மோடி கோவளம் சென்ற மோடி நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார். மாலை 4.55 மணிக்கு மாமல்லபுரம் வந்தடையும் சீன அதிபர் ஜின்பிங்கை பிரதமர் மோடி வரவேற்கிறார். பின்னர் இருவரும் மாமல்லபுரத்தில் உள்ள புகழ்பெற்ற சிற்பங்களை பார்வையிடுகிறார்கள். அர்ஜுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை, ஐந்து ரதம் ஆகியவைகளை பார்வையிடும் அவர்கள், தொடர்ந்து கடற்கரை கோயில் அருகில் நடைபெறும் பிரமாண்ட கலைநிகழ்ச்சிகளை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து