முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் நிலநடுக்கம் - 5.2 ரிக்டராக பதிவு

ஞாயிற்றுக்கிழமை, 13 அக்டோபர் 2019      உலகம்
Image Unavailable

பெய்ஜிங் : சீனாவில் நேற்று முன்தினம் இரவு 5.2 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

தெற்கு சீனாவின் குவாங்சி சுவாங் தன்னாட்சி பகுதியில் நேற்று முன்தினம் இரவு 10.55 மணிக்கு திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம், யுலின் நகரத்தில் சுமார் 10 கி.மீ ஆழத்தில் பதிவாகியிருந்ததாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. மேலும் இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து