முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீயணைப்புத் துறையின் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு முகாம்

திங்கட்கிழமை, 21 அக்டோபர் 2019      மதுரை
Image Unavailable

மதுரை - மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, யா.ஒத்தக்கடையில், மதுரை தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்தின் சார்பாக விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு முகாம் உதவி மாவட்ட அலுவலர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. ஒத்தக்கடை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் மோசஸ் மங்களராஜ் வரவேற்றார். மழை வெள்ளக் காலங்களில் குழந்தைகள் தங்களை எவ்வாறு காத்துக் கொள்வது பற்றியும், தீ விபத்துக்களின் போது எவ்வாறு தப்பித்துக் கொள்வது, முதல் உதவி செய்வது என்பது பற்றி செயல்முறை விளக்கம், உரிய கருவிகளின் உதவியுடன் அளிக்கப்பட்டது. விபத்தில்லா தீபாவளி எவ்வாறு கொண்டாட வேண்டும் என்பது பற்றி மாணவர்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. எரியும் நெருப்பினை எவ்வாறு சாக்கு கொண்டு அணைப்பது, தீயணைப்பு கருவியின் உதவியுடன் எவ்வாறு நெருப்பினை அணைப்பது என்பது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. மாணவர்களும் ஆசிரியர்களும் செயல் விளக்கத்தில் பங்கேற்றனர். தீயணைப்பு அலுவலர்கள் பால நாகராஜ், கந்தசாமி, ஜீவ மாணிக்கம், சின்னச்சாமி, செல்வகுமார், மாயகிருஷ்ணன், சந்திரசேகரன், ஆரோக்கியதாஸ், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக செய்திருந்தனர். முன்னதாக ஒத்தக்கடை தொடக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடிகளை உதவி மாவட்ட அலுவலர் சுப்பிரமணியன் அவர்கள் ஆய்வு செய்தார். ஆசிரியை மெர்சி நன்றி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து