முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நத்தம் பகுதியில் தொடர் மழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு

புதன்கிழமை, 30 அக்டோபர் 2019      திண்டுக்கல்
Image Unavailable

நத்தம்,-  திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று பகல் முழுவதும் தொடர் மழை பெய்தது. இதனால் பொதுமக்களுக்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் சாலையோர சில்லரை வியாபாரிகளுக்கு வியாபாரம் முழுமையாக நடைபெறவில்லை. இதனால் அவர்கள் கவலையடைந்துள்ளனர்.மேலும் நத்தம் வட்டாரத்தில் உள்ள மானாவாரி பயிர்களும், பலன் தரும் மா, பலா, வாழை,தென்னை, கொய்யா போன்ற மர வகைகளும் தொடர் மழையினால் செழிப்புடன் காணப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்பு இருக்கிறது என்று விவசாயிகள் கூறுகின்றனர். மேலும் இந்த மழையினால் கால்நடை வளர்ப்பவர்களும், தீவன தட்டுப்பாடு இல்லாமல் பசும்புல்களில் மேயவிடுவதற்கு வாய்ப்பாக உள்ளது. இந்த மழையினால் விவசாயிகள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், கனமழையை எதிர்பார்த்து குறுவை சாகுபடிக்காக நத்தம் பகுதி விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து