முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏ.டி.பி. உலக டென்னிஸ் போட்டி கிரீஸ் சிட்சிபாஸ் சாம்பியன்

திங்கட்கிழமை, 18 நவம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

லண்டன் : ஏ.டி.பி. உலக டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ், ஆஸ்திரியா வீரரான டொமினிக் தீம்மை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றார்.

உலகின் ‘டாப் 8’ வீரர்கள் பங்கேற்ற ஏ.டி.பி. டென்னிஸ் இறுதிச் சுற்று லண்டனில் நடந்தது. இதன் இறுதிப்போட்டியில் டொமினிக் தீம் (ஆஸ்திரியா)- ஸ்டெபானஸ் சிட்சிபாஸ் (கிரீஸ்) ஆகியோர் மோதினார்கள். முதல் 3 இடங்களில் உள்ள நடால் (ஸ்பெயின்), ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), ஜோகோவிச் (செர்பியா) ஆகியோரை பின்னுக்கு தள்ளி விட்டு இருவரும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தனர். இதில் 21 வயதான சிட்சிபாஸ் 6-7 (6-8), 6-2, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் டொமினிக் தீம்மை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 2 மணி 35 நிமிட நேரம் தேவைப்பட்டது. அவர் ஏற்கனவே அரை இறுதியில் ரோஜர் பெடரரை தோற்கடித்து இருந்தார்.

சாம்பியன் பட்டம் வென்ற ஸ்டெபானஸ் சிட்சிபாசுக்கு ரூ.9½ கோடி பரிசாக கிடைத்தது. ஏ.டி.பி. இறுதிச்சுற்று பட்டத்தை இளம் வயதில் வென்ற 2-வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இந்த பட்டத்தை பெற்ற முதல் கிரீஸ் வீரர் என்ற சாதனையை படைத்தார். 2001-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவை சேர்ந்த லைடன் ஹெவிட் 20 வயதில் இந்த படத்தை பெற்றிருந்தார்.

இந்த போட்டியில் அரை இறுதிக்கு தகுதி பெறாமல் போனாலும் இந்த ஆண்டின் இறுதிப்பட்டியலில் ரபெல் நடால் தொடர்ந்து ‘நம்பர் 1’ இடத்தில் உள்ளார். ஜோகோவிச் 2-வது இடத்திலும், பெடரர் 3-வது இடத்தில் உள்ளனர்.

இறுதிப்போட்டியில் விளையாடிய டொமினிக் தீம் ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தை பிடித்தார். மெட்வதேவ் (ரஷ்யா) ஒரு இடம் பின்தங்கி 5-வது இடத்தில் உள்ளார். சாம்பியன் பட்டம் வென்ற சிட்சிபாஸ் 6 - வது இடத்தில் உள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து