முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடந்தாலும் தேர்ச்சி நிச்சயம்: அமைச்சர்

சனிக்கிழமை, 30 நவம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

கோபி : 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு நடந்தாலும் 3 ஆண்டுகளுக்கு அவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவர் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே தூக்கநாயக்கன் பாளையத்தில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சாலை மேம்பாடு, குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் கட்டுமானம் ஆகிய பணிகளுக்கு பூமி பூஜை நேற்று நடைபெற்றது. ரூ.11 கோடி மதிப்பீட்டில் நடைபெற உள்ள பூஜையில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

அரசுப் பள்ளி மாணவர்கள் விளையாட்டு, இயல், இசை, நாடகம், ஓவியம் ஆகிய திறமைகளை வளர்த்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். யோகா, சாலை விதிகள் ஆகியவற்றுக்காகவும் ஒருநாள் பயிற்சி வழங்கப்படும். அரசுப் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆங்கில மொழிப் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. வாரம் ஒருமுறை 90 நிமிடங்கள் இதற்கான பயிற்சி வழங்கப்படும். 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை. 3 ஆண்டுகளுக்கு அவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவர். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து