குற்றவியல் நீதித் துறையின் மீது மக்களுக்கு அவநம்பிக்கை வந்து விட்டது: கெஜ்ரிவால்

வெள்ளிக்கிழமை, 6 டிசம்பர் 2019      இந்தியா
Kejriwal 2019 08 01

மக்களுக்கு குற்றவியல் நீதித் துறையின் மீது அவநம்பிக்கை வந்து விட்டது என்று தெலுங்கானா என்கவுண்டர் சம்பவம் குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மாநிலம் ஷம்சாபாத் சுங்கச் சாவடி அருகே கால்நடை பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக கைதான 4 பேரும் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்,

ஐதராபாத், உன்னாவோ போன்று அண்மைக்காலமாக வெளிச்சத்துக்கு வரும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாகவே அவர்கள் தெலுங்கானா என்கவுன்ட்டர் குறித்து மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். மக்களுக்கு குற்றவியல் நீதித் துறையின் மீது அவநம்பிக்கை வந்து விட்டது. இது வருந்தத்தக்கது. அனைத்து அரசுகளும் ஒன்றிணைந்து குற்றவியல் நீதித் துறையை வலுப்படுத்தும் தருணம் வந்து விட்டது என்று தெரிவித்தார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து