முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.எஸ்.எல். கால்பந்து: கொல்கத்தா அணி 7-வது வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜனவரி 2020      விளையாட்டு
Image Unavailable

கொல்கத்தா : ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், கொல்கத்தா அணி த்னது 7-வது வெற்றியை பதிவு செய்தது.

6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடரில் கொல்கத்தாவில் நேற்று முன்தினம் இரவு நடந்த 62-வது லீக் ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா-எப்.சி.கோவா அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணி 2-0 என்ற கோல் கணக்கில் கோவா அணியை வீழ்த்தியது. கொல்கத்தா அணியில் 47-வது நிமிடத்தில் பிரித்தமும், 88-வது நிமிடத்தில் ரானேவும் கோல் அடித்தனர். 13-வது ஆட்டத்தில் ஆடிய கொல்கத்தா அணி பெற்ற 7-வது வெற்றி இதுவாகும். இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் இருந்து முதலிடத்துக்கு உயர்ந்தது. 13-வது ஆட்டத்தில் விளையாடிய கோவா அணி சந்தித்த 3-வது தோல்வி இது. இதனால் கோவா அணி முதலிடத்தில் இருந்து 2-வது இடத்துக்கு இறங்கியது. நேற்று இரவு 7.30 மணிக்கு ஜாம்ஷெட்பூரில் நடைபெற்ற 63-வது லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி.-கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து