முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாவட்ட டிஜிட்டல் சேவா சொசைட்டி துவக்கம்:

வியாழக்கிழமை, 30 ஜனவரி 2020      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மதுரை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பொது சேவை மையங்கள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற இ-சேவை மையங்களின் உரிமையாளர்கள் இணைந்து உருவாக்கியுள்ள மதுரை மாவட்ட டிஜிட்டல் சேவா சொசைட்டியின் துவக்க விழா நேற்று மதுரை ஜெய்ஹிந்த்புரத்திலுள்ள தனியார் ஹோட்டலில் வெகு சிறப்பாக நடைபெற்றது.இவ்விழாவிற்கு சொசைட்டியின் தலைவர் ராமநாதன் தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் ஆறுமுகவேல் வரவேற்றார்.டிஜிட்டல் இந்தியா பொது சேவை மையங்களின்(சி.எஸ்.சி) மதுரை மாவட்ட மேலாளர்கள் கார்த்திகேயன், பாலமுருகன்,ஆன்லைன் சட்ட உதவிகள்(டெலி-லா) சேவையின் மாநில பொறுப்பாளர் ஷாருக்கான் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.அப்போது 60க்கும் மேற்பட்டோர் இந்த சொசைட்டியின் தங்களை புதிய உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர் செந்தில்,துணைச் செயலாளர் ஜோயல் ரிச்சர்டு உட்பட பலர் கலந்து கொண்டனர்.விழாவின் நிறைவில் பொருளாளர் பேச்சிமுத்துராஜா நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து