முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முத்திரைத்தாள் வரி குறைப்பு: தமிழக பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள்

வெள்ளிக்கிழமை, 14 பெப்ரவரி 2020      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தில் முத்திரைத்தாள் வரி ஒரு சதவீதத்திலிருந்து 0.25 சதவீதமாக குறைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

  • * புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கப்படும்
  • சிறு-குறு, நடுத்தர தொழில்களுக்கான வட்டி மானியம் 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்த்தப்படும்
  • சேலம் மாவட்டம் புத்திரகவுண்டம்பாளையம், உமையாள்புரம் ஆகிய இடங்களில் புதிதாக சிப்காட் தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும்
  • முத்திரைத்தாள் வரி ஒரு சதவீதத்திலிருந்து 0.25 சதவீதமாக குறைக்கப்படும்
  •  ஜவுளித்துறைக்கு ரூ.1,224 கோடி நிதி ஒதுக்கீடு
  •  தகவல் தொழில்நுட்பத்துறைக்கு ரூ.1,53 கோடி நிதி ஒதுக்கீடு
  •  இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ.281 கோடி நிதி ஒதுக்கீடு
  •  மகளிர் நல திட்டங்களுக்கு ரூ.78,796 நிதி ஒதுக்கீடு
  •  வருவாய் பற்றாக்குறை 2021-22ல் ரூ.16,893.19 கோடி, 2022-23ல் ரூ.10,697.47 கோடியாக இருக்கும்
  •  அல் கெப்லா குழுமத்தின் பெட்ரோலிய சுத்திகரிப்பு வளாகம் ரூ.49,000 கோடி செலவில் அமைக்கப்படும்
  •  பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு ரூ.1,064 கோடி ஒதுக்கீடு
  •  தமிழகத்தின் 37 மாவட்டங்களிலும் முதியோர் ஆதரவு மையங்கள் தொடங்கப்படும்
  • தென்காசியில் எலுமிச்சை மையம், தூத்துக்குடியில் மிளகாய் மையம் அமைக்கப்படும்
  •  தமிழகத்தில் அனைத்து பேருந்துகளில் பெண்களின் பாதுகாப்பிற்காக கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்
  •  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு ரூ.375 கோடி ஒதுக்கீடு
  •  சாரபங்கா நீரேற்று பாசன திட்டத்தை செயல்படுத்த பட்ஜெட்டில் ரூ.350 கோடி நிதி ஒதுக்கீடு
  •  வருவாய் வரவினங்கள் ரூ.5,860 கோடி குறைந்து செலவினம் ரூ.4,896 கோடியாக உயர்ந்ததே பற்றாக்குறைக்கு காரணம்
  •  ஆதி திராவிடர், பழங்குடியின மாணவர்களின் உயர்கல்வி ஊக்கத்தொகைக்கான மத்திய அரசின் தொகை குறைப்பு
  •  விழுப்புரம் அழகன்குப்பம், செங்கல்பட்டு ஆலம்பரைக் குப்பத்தில் மீன்பிடித்துறைமுகம் அமைக்க ரூ.235 கோடி
  •  ஊரக வளர்ச்சித்துறைக்காக ரூ.23,161 கோடி நிதி ஒதுக்கீடு
  •  வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில் இடைவெளியை நிரப்பும் ஊக்க நிதிக்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு
  •  குடிமராமத்து திட்டத்திற்காக பட்ஜெட்டில் ரூ.300 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  •  அம்மா உணவக திட்டத்துக்கு ரூ. 100 கோடி ஒதுக்கீடு
  •  இயற்கை மரணம் அடைந்தவர்களுக்கான இழப்பீடு ரூ. 2 லட்சமாக உயர்த்தப்படும்.
  •  விபத்தில் மரணமடைந்தால் ரூ. 4 லட்சம் இழப்பீடு.
  •  ஸ்மார்ட் ரேசன் கார்டு மூலம் எந்த நியாயவிலைக் கடையிலும் பொருள் வாங்கும் திட்டம் விரைவில் அமல்.
  •  காவிரி, குண்டாறு திட்டத்துக்கு நிலம் எடுக்க ரூ. 700 கோடி ஒதுக்கீடு.
  •  கூட்டுறவு சங்கம் மூலம் கடன் வழங்க ரூ. 11 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
  •  பள்ளிகளில் மதிய சத்துணவு திட்டத்துக்கு ரூ. 1863 கோடி ஒதுக்கீடு.
  •  அம்மா இரு சக்கர வாகன திட்டத்துக்கு ரூ. 253.14 கோடி ஒதுக்கீடு.
  •  தமிழகத்தில் 11 மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க ரூ. ஆயிரத்து 200 கோடி ஒதுக்கீடு

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து