மார்ச்-1ல் இருந்து ஐ.பி.எல். 2020 சீசன் பயிற்சியை தொடங்குகிறார் டோனி

ஞாயிற்றுக்கிழமை, 16 பெப்ரவரி 2020      விளையாட்டு
dhoni 2020 02 16

மும்பை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பயிற்சியை தொடங்கிய நிலையில் மார்ச் 1-ம் தேதியில் இருந்து டோனியும் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.பி.எல். 2020 சீசன் அடுத்த மாதம் 29-ம் தேதி தொடங்குகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கடந்த மூன்று வாரங்களாக ரெய்னா, அம்பதி ராயுடு ஆகியோர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அணியின் கேப்டனான  டோனி மார்ச் 1-ம் தேதி அணியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரின் அரையிறுதி போட்டிக்குப் பின் டோனி இந்திய அணியில் இடம் பெறாமல் உள்ளார். மார்ச் 1-ம் தேதி சென்னை வந்து பயிற்சியில் ஈடுபடும் டோனி இரண்டு மூன்று வாரங்கள் பயிற்சி மேற்கொண்ட பின், நான்கு அல்லது ஐந்து நாட்கள் சொந்த ஊர் செல்வார் என்றும், அதன்பின் போட்டி தொடங்குவதற்கு முன் அணியில் இணைவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து