முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். தொடரை விட ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கை முக்கியமானது : சுரேஷ் ரெய்னா உருக்கம்

சனிக்கிழமை, 4 ஏப்ரல் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : ஐ.பி.எல். தொடரை விட ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கை முக்கியமானது என சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ரெய்னா தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டுக்கான 13 - வது ஐ.பி.எல். போட்டியை கடந்த 29-ம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டு இருந்தது. கொரோனா வைரஸ் காரணமாக இந்த போட்டி வருகிற 15-ம் தேதி வரை தள்ளி வைக்கப்பட்டது. தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக இந்த ஆண்டு ஐ.பி. எல். போட்டி ரத்து செய்யப்பட அதிகமான வாய்ப்பு இருக்கிறது. 15 -ம் தேதிக்கு பிறகு இது குறித்து முடிவு செய்யப்படும். 

இது குறித்து கிரிக்கெட் வீரர் சுரேஷ்ரெய்னா கூறியிருப்பதாவது:-

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐ.பி.எல். தொடரை விட ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கை முக்கியமானது.மீண்டும் இயல்புநிலை திரும்பும் போது ஐ.பி.எல் தொடர் குறித்து யோசிக்கலாம். தற்போது உயிர் சேதம் ஏற்படுகிறது. இதனால் நமது உயிரை காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நெருக்கடியான கட்டத்தில் உள்ளோம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாம் நன்றாக இருந்தது. வலைப்பயிற்சியில் டோனி சிறப்பாக பேட்டிங் செய்தார்.

3 மணி நேரம் பேட்டிங் செய்த அவர் இளம் வீரர் போல் துடிப்புடன் காணப்பட்டார். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2 - ல் உலக கோப்பை வென்றதை கொண்டாடி வருகிறோம். இறுதிப்போட்டியில் ஜாகீர்கான் பந்துவீச்சு, காம்பீர், டோனியின் பேட் டிங், யுவராஜ் சிங்கின் ஆல் ரவுண்டர் செயல்பாடு கை கொடுத்தது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். கொரோனா தடுப்பு நிவாரணத்திற்கு சுரேஷ் ரெய்னா ரூ. 52 லட்சம் நிதி வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து