முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போரிஸ் ஜான்சன் விரைவில் குணமடைய அதிபர் டிரம்ப் - பிரதமர் மோடி பிரார்த்தனை

செவ்வாய்க்கிழமை, 7 ஏப்ரல் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

லண்டன் : இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா பாதிப்பில் இருந்து விரைவில் குணம் அடைய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய பிரதமர் மோடி ஆகியோர் பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளனர்.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலகின் 202 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இங்கிலாந்து நாட்டிலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் (வயது 55) கொரோனா பரவியிருந்தது கடந்த மாதம் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர் தன்னைத்தானே 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள போரிஸ் ஜான்சனின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் எற்படாமல் தற்போது அவரது உடல் நிலை மோசமடைந்து வருகிறது. இதுகுறித்து அந்நாட்டு சுகாதார அமைச்சர் கூறும் போது, 

டாக்டர்களின் அறிவுரைப்படி பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். முன் எச்சரிக்கையாகவே அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார் என்று கூறியுள்ளார். ஆனால் போரிஸ் ஜான்சன் திடீரென ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதால் அவரது உடல் நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது. 

இந்த நிலையில் போரிஸ் ஜான்சன் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் அவர் தற்போது சாதாரண வார்டில் இருந்து தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற் றப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மோசமான நிலையில் இருந்து வருகிறது. இதை பிரதமர் அலுவலக அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

போரிஸ் ஜான்சனின் உடல்நிலை மோசம் அடைந்துள்ளதால் முன் எச்சரிக்கையாகவே அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்படவில்லை. தானாகவே சுவாசிக்கிறார். அதிக காய்ச்சல் தொடர்ந்து இருந்து வருகிறது. அவரை டாக்டர்கள் தீவிர கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள் என்றனர். போரிஸ் ஜான்சனின் கர்ப்பிணி காதலியான கேரிசைமன்சும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருந்தார். அவர் அதிலிருந்து மீண்டு குணம் அடைந்து விட்டார். கேரிசைமன்சை விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக போரிஸ் ஜான்சன் சமீபத்தில் அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து இளவரசர் சார்லசும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்துள்ளார். 

போரிஸ் ஜான்சன் விரைவில் குணம் அடைய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய பிரதமர் மோடி ஆகியோர் பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறும் போது, போரிஸ் ஜான்சன் கொரோனா பாதிப்பால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் குணம் அடைவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அதற்காக பிரார்த்தனை செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

இந்திய பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில்,  கொரோனா வைரசால் பாதிப்படைந்துள்ள போரிஸ் ஜான்சன் ஆஸ்பத்திரியில் இருந்து சிகிச்சை பெற்று விரைவில் குணமடைந்து மருந்துவமனையில் இருந்து வெளியே வருவீர்கள் என நான் நம்புகிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து