முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் பின்லேடன் உடல்?

வெள்ளிக்கிழமை, 9 மார்ச் 2012      உலகம்
Image Unavailable

 

லண்டன், மார்ச்.9 - பின்லேடன் உடல் அமெரிக்காவுக்கு எடுத்து செல்லப்பட்டதாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  பாகிஸ்தானின் அபோடாபாத்தில் கடந்த ஆண்டு மே மாதம் 2 ம் தேதி அமெரிக்க கடற்படை கமாண்டோக்களின் அதிரடி தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரது உடல் முஸ்லீம் மத வழக்கப்படி இறுதி மரியாதையுடன் கடலில் தகனம் செய்யப்பட்டதாக அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அமெரிக்க அரசு, ராணுவம், உளவு பிரிவுக்காக ரகசியமாக செயல்பட்டு வரும் க்ட்ராட்போர் நிறுவனத்தின் தலைவர் அனுப்பிய ஒரு இமெயிலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. 

அதில் பின்லேடன் உடல் பரிசோதனைக்காக அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பின்லேடன் கொல்லப்பட்ட அதே நாளில் இந்த இமெயில் அனுப்பப்பட்டுள்ளது. விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி பின்லேடன் உடல் இப்போதும் அமெரிக்காவில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்